சுமார் 2005 il திரு தயாநிதி மாறன் அவர்கள் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தருணத்தில், திருவன்மயுர் - கேளம்பாக்கம் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை முக்கிய துவம் பெற்றது. அதற்கு முன்பு வரை சில இன்ஜினியரிங் காலேஜ் , மற்றும் சில தொழில் நிறுவனங்கள் மட்டும் இருந்த இந்த சாலை திடீரென முக்கிய துவம் பெற்றது. தண்ணீர் வடிகால், மின்சார வயர்கள், தகவல் தொடர்பு வயர்கள் என எல்லாம் தரைக்கடியில் இருக்குமாறு நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டது. கிட்டத்தட்ட எல்லா பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் சாலை கடபதற்காக நடை பாலம் கட்டப்பட்டது.
அப்போது எல்லாம் சில தகவல் தொடர்பு நிறுவங்களே இங்கு தங்கள் அலுவலகங்களை அமைத்திருந்தன. பல கட்டட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. திருவன்மயுரில் இருந்து சோளிங்கநல்லூர் செல்வதற்கு Van மட்டுமே அதிகம் இருந்தன. அதிலும், வட நாடு கட்டட தொழிலாளர்கள் கூரையின் மேல் ஏறி பயணம் செல்லும் நிலை தான். ஆனால் கிட்டத்தட்ட இந்த ஆறு வருடங்களில் ஏற்பட்ட சாலை முன்னேடங்களை பார்த்தால் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது. இன்னும் பல இடங்களில் கேபிள் பதித்த பள்ளங்கள் மூட படவில்லை . SRPTOOLS தொடங்கி கேளம்பாக்கம் வரையிலும் இன்னும் ஒரு பயணிகள் நிழற்குடை கூட இல்லாத நிலை தான். இப்போது தான் மக்கள் நடந்து செல்லும் பாதையில் ஓடுகள் பதிகிறார்கள். இந்த பணி இன்னும் எதனை ஆண்டுகள் அகபோகிறதோ.
சாலை ஓர கடைகள் தொடங்கி விண்ணை முட்டும் கட்டடங்கள், ப்ளாட்டுகள் என பெருகி விட்ட போதும் இன்னும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது. இப்போது VAN களை காண முடிவதில்லை, ஆனால் பஸ் எண்ணிக்கைகள் அதிகமாக்க படுகின்றன. ஆனாலும் மக்கள் கூடம் தினமும் அலை மோதுகிறது. கிழக்கு தாம்பரம் இல் இருந்து திருவன்மயுர் வரை செல்லும் T51 பேருந்துகள் கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கு ஒருமுறை இயக்க பட்டாலும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை.
மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்த பாதை இல்லை, மோனோ ரயில் முதல் இரண்டு phase களிலும் OMR க்கு இடம் இல்லை. பெருங்குடி வழியாக செல்லும் ECR ரயில் லைன் இன்னும் 6 ஆண்டுகள் ஆகியும் சர்வே கூட செய்ய படவில்லை.
இப்போதைக்கு தற்காலிகமாக இந்த பணிகளை தமிழக அரசு செய்தால் மக்களுக்கு நல்ல பயன்பாட்டை தருவதாக இருக்கும்.
1 . நடை பாதை அமைக்கும் பணி (SRPTOOLs இருந்து குறைந்த அளவு NAVALUR வரை)
2 . பேருந்து நிழற்குடைகள் (SRPTOOLs இருந்து கேளம்பாக்கம் வரை)
3 . சில புதிய பேருந்து வழித்தடங்கள் (த.நகர் , மெரினா, கோயம்பேடு, Tambaram மற்றும் கிண்டி மட்டுமே சொல்ல கூடிய அளவில் இணைக்க பட்டுள்ளன. இன்னும் Egmore , புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகியன.
4.சின்ன மலை வரை MRTS வசதி நீடிக்க பட வேண்டும்.
5 பேருந்து நிறுத்தங்களை ஒட்டி இருக்கும் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூட படவேண்டும்..
No comments:
Post a Comment