இந்த முறை பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்ட பல விதிமுறைகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கின் காரணமாகவும் இன்னும் பல இடங்களில் சிவகாசி பட்டாசு விற்பனை கடைகள் திறக்கபடவே இல்லை. மேலும் உள்ளாட்சி தேர்வு நாட்களும் வந்து சேர இதுவரை விற்பனை வெகு குறைவாகவே உள்ளது.
18m தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பு அல்லது இடைக்கால உத்தரவை பொறுத்தே இந்த தீபாவளி பட்டாசு விற்பனை வுள்ளது. எப்படி ஆனாலும் கடைகள் திர்ரக்கபடும் என்றே நம்புகிறோம்.
நேற்று நான் SRP டூல்ஸ் இருந்து தொரைபக்கம் வரை பயணம் செய்ததில் மொத்தமே இரண்டு கடைகள் மட்டுமே வெறும் பெயர் பலகை மட்டும் தாங்கி இருந்தன. இது மக்களுக்கான ஒரு குறிப்பாகவே பட்டது.
ஒரு தேடுதலுக்காக கூகுள் செய்தபோது online பட்டாசு விற்பனை தளங்கள் வெகு சிலவே இருந்தன. ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே எனக்கு நல்ல ஒரு சர்வீஸ் அளிபதாக இருந்தது. ஆனாலும் அதிலும் Oct16 இல் விற்பனை முடிவு செய்யப்பட்டதாக இருந்தது ஏமாற்றம் அளித்தது.
இதோ அந்த முகவரி. http://www.peacockcrackers.com/ .
இப்போதைக்கு திடீர் கடைகள் மூலமே வாங்க முடியும் என்று நினைக்கிறன். சென்ற ஆண்டு சுமார் 40 தினங்களுக்கு முன்பே ஹோசூர் சென்று வாங்கி வந்தது நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 300 கடை களுக்கு மேலேயே இருக்கும். ஹோசூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுசுவடி செக் போஸ்ட் வரை சாலையின் இரு மருங்கிலும் பரவி கிடக்கும் இந்த கடைகள் தன பெங்களூர் நகரின் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதுமட்டும் அன்றி MRP விலையில் சுமார் 85 % வரை தள்ளுபடி கொடுக்கின்றன.
ஸ்டாண்டர்ட் Crackers Online விலைபட்டியல். இதோ இங்கே. இது வுங்களுக்கு பேரம் பேச உதவும்.
சிறந்த கடை, நல்ல விலையில் பட்டாசு கிடைப்பின் பின்னோட்டம் இடவும். இந்த தளத்தில் உங்கள் நேரம் செலவிட்டமைக்கு நன்றி.
No comments:
Post a Comment