Saturday 22 October 2011

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததை விட அதிமுக உக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பெங்களூர் கோர்ட் வெப்பத்தையும் மீறி இந்த காற்று அடித்ததில் முதல்வர் குளிர்ந்து போயிருப்பார். அதே போல் திரு சைதை துரைசாமி அவர்கழுக்கும் இன்று பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. ஒருவேளை திரு ஸ்டாலின் அவர்களை வென்றாலும் கூட MLA அல்லது ஒரு அமைச்சர் பதவியுடன் நின்று போய் இருக்கும். 
சட்டசபை தேர்தலில் உள்ள அதே அளவு பதிலீடு மக்களிடம் இருந்து ஜெ க்கு கிடைத்துள்ளது. அவருடைய சொத்து குவிப்பு வழக்கை மக்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. அதே நேரம் இந்த வழக்கின் பிடி இருகுவதாக தோன்றுகிறது. 

மற்ற தேர்தல் முடிவுகள் போல் அல்லாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெகு நேரமாக போய் கொண்டே இருகின்றன . அனேகமாக நாளை நண்பகல் வரை இந்த முடிவுகள் தொடரும். 
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து சில மணி நேரங்களிலே மாநகராட்சி நிலவரங்கள் தெரிந்து விட்டன. Vellore மட்டும் திமுக வசப்படும் என்று நினைத்தேன் அதுவும் 3vathu சுற்று முடிவுக்கு பின் மாயமானது. 
தபால் ஓட்டுகள் இந்த முறை திமுக உக்கு அதிகம் கிடைத்தன. இது அரசு ஊழியர்கள் திரும்பவும் திமுக வரவை விரும்புவதை காட்டுகிறது.

அணைத்து கட்சிகளும் தனித்து களம் கண்டத்தில் , பல பேரின் சாயம் வெளுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும் என்று நேற்றுதான் திரு EVKS இளங்கோவன் கூறியதாக செய்தி. Vellore , தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் மட்டும் சொல்லிகொள்ளும் அளவுக்கு உள்ளது. மொத்தம் உள்ள மாநகராட்சி கவுன்சிலர் இடங்களில், இது வரை சுமார் 15 இடங்களை மட்டும் பிடித்து, கோஷ்டிக்கு 2 என உள்ளது. 

திரு விஜயகாந்த் அவர்களின் DMDK பொறுத்த மட்டில் இதுஒரு கெட்ட கனவு போல்   தோன்றுகிறது. பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் இடங்களில் மட்டுமே சொல்லும் அளவுக்கு கிடைத்துள்ளது. இதனை ஒப்பிடும் பொழுது 29 MLA பெரும் தகுதி இல்லை எனவே தோன்றுகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல் தான் கப்டனின் கதையை முடிவு செய்யும். வடிவேலு இந்த முறை பிரசாரத்துக்கு வந்திருந்தால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பார். திரு பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள் இம்முறை பிரசாரத்தில் ஈடு படவில்லை என்று நினைக்கிறன்.

திமுக பொருத்தமட்டில் இதுவும் ஒரு படுதோல்வி தான். நல்ல எண்ணிக்கையில் கவுன்சிலர்களை பெற்றாலும் அது அதிமுக எண்ணிக்கையில் பாதி கூட இல்லை என்பதே உண்மை. இனி ஜெ செய்யும் தவறுகளே திமுக வின் வாக்கு எண்ணிகையை கூட்டும். அரசின் கைது நடவடிக்கைகள் மக்களின் மனதில் எந்த மாற்றதும் ஏற்படுத்தவில்லை. இனி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது மறு பரிசீலனைக்கு உள்ளாகும் என நினைக்கிறன்.

6 MLA சீட்டு தரவா என இருந்த அளவில் மதிமுக உக்கு சிறிது முன்னேற்றம் . ஆனால் இன்னும் கொஞ்சம் நகராட்சிகள் கிடைத்தால் வைகோ விற்கு நல்லதாக இருந்திருக்கும . ஆனால் தூத்துக்குடி போன்ற மாநகரட்சிகளில் கிடைத்த ஓட்டு, அடுத்த தேர்தல் பேச்சு வார்த்தை களுக்கு பலன் அளிக்கும். 

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு மரண அடி கிடைத்துள்ளது. எண்ணிகையை வைத்து பார்க்கும் பொழுது பிஜேபி,PMK , தேமுதிக ,இரண்டு கம்யூனிஸ்ட் சேர்ந்து ஒரே அளவில் உள்ளன. மதிமுக அதற்கு சற்று குறைவாக உள்ளது. ஆனால் வாக்கு சதவீதம் வேறு வரிசை படுத்தும். 
தற்போதைய நிலைமை:

TamilNadu Local Body Election - 2011 Result

Summary of Seats won by All Political Parties
Party NameCorporationMunicipalitiesTown panchayatDistrict Panchayat Ward MemberPanchayat Union Ward MemberTotal
MayorCouncillorChairmanCouncillorChairmanWard Member
AIADMK836288166728428374419337223
DMK010323952121181325073521
Independent050554964199103413000
INC015016424377299681
DMDK05212033941150675
BJP0423813181227267
PMK010602108090261
MDMK09149782122171
CPI(M)022205101218150
CPI0001023312571
Others000140300246
VCK010130120531
PT0000070411
RJD0001080110
BSP000102014
PB000003003
AIFB000001001
IJK000001001
NCP000000011
CPI(ML)000000000
IVP000000000
JD (S)000000000
JD (U)000000000
JP000000000
MGRK000000000
MMK000000000
PNK000000000
RMC000000000
SP000000000
TDK000000000
TVPI000000000
Total85521233658525798155322616128
 
Last Updated at 00:05 AM On 22/10/2011



Monday 17 October 2011

தீபாவளியும் பட்டாசு கடைகளும் , சென்னையும்

 இந்த முறை பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்பட்ட பல விதிமுறைகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கின் காரணமாகவும் இன்னும் பல இடங்களில் சிவகாசி பட்டாசு விற்பனை கடைகள் திறக்கபடவே இல்லை. மேலும் உள்ளாட்சி தேர்வு நாட்களும் வந்து சேர இதுவரை விற்பனை வெகு குறைவாகவே உள்ளது. 

18m  தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பு அல்லது இடைக்கால உத்தரவை பொறுத்தே இந்த தீபாவளி பட்டாசு விற்பனை வுள்ளது. எப்படி ஆனாலும் கடைகள் திர்ரக்கபடும் என்றே நம்புகிறோம். 


நேற்று நான் SRP டூல்ஸ் இருந்து தொரைபக்கம் வரை பயணம் செய்ததில் மொத்தமே இரண்டு கடைகள் மட்டுமே வெறும் பெயர் பலகை மட்டும் தாங்கி இருந்தன. இது மக்களுக்கான ஒரு குறிப்பாகவே பட்டது. 

ஒரு தேடுதலுக்காக கூகுள் செய்தபோது online பட்டாசு விற்பனை தளங்கள் வெகு சிலவே இருந்தன. ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே எனக்கு நல்ல ஒரு சர்வீஸ் அளிபதாக இருந்தது. ஆனாலும் அதிலும் Oct16 இல் விற்பனை முடிவு செய்யப்பட்டதாக இருந்தது ஏமாற்றம் அளித்தது.

இதோ அந்த முகவரி. http://www.peacockcrackers.com/ .

இப்போதைக்கு திடீர் கடைகள் மூலமே வாங்க முடியும் என்று நினைக்கிறன். சென்ற ஆண்டு சுமார் 40 தினங்களுக்கு முன்பே ஹோசூர் சென்று வாங்கி வந்தது நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 300 கடை களுக்கு மேலேயே இருக்கும். ஹோசூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுசுவடி செக் போஸ்ட் வரை சாலையின் இரு மருங்கிலும் பரவி கிடக்கும் இந்த கடைகள் தன பெங்களூர் நகரின் தேவையை பூர்த்தி செய்கின்றன. அதுமட்டும் அன்றி MRP விலையில் சுமார் 85 % வரை தள்ளுபடி கொடுக்கின்றன. 

ஸ்டாண்டர்ட் Crackers  Online விலைபட்டியல். இதோ இங்கே. இது வுங்களுக்கு பேரம் பேச உதவும். 

சிறந்த கடை, நல்ல விலையில் பட்டாசு கிடைப்பின் பின்னோட்டம் இடவும். இந்த தளத்தில் உங்கள் நேரம் செலவிட்டமைக்கு நன்றி. 

Wednesday 5 October 2011

பழைய மகாபலிபுரம் ரோடின் பரிதாபமான நிலை :




சுமார் 2005 il திரு தயாநிதி மாறன் அவர்கள் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தருணத்தில், திருவன்மயுர் - கேளம்பாக்கம் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை முக்கிய துவம் பெற்றது. அதற்கு முன்பு வரை சில இன்ஜினியரிங் காலேஜ் , மற்றும் சில தொழில் நிறுவனங்கள் மட்டும் இருந்த இந்த சாலை திடீரென முக்கிய துவம் பெற்றது. தண்ணீர் வடிகால், மின்சார வயர்கள், தகவல் தொடர்பு வயர்கள் என எல்லாம் தரைக்கடியில் இருக்குமாறு நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டது. கிட்டத்தட்ட எல்லா பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் சாலை கடபதற்காக நடை பாலம் கட்டப்பட்டது.

அப்போது எல்லாம் சில தகவல் தொடர்பு நிறுவங்களே இங்கு தங்கள் அலுவலகங்களை அமைத்திருந்தன. பல கட்டட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. திருவன்மயுரில் இருந்து சோளிங்கநல்லூர் செல்வதற்கு Van மட்டுமே அதிகம் இருந்தன. அதிலும், வட நாடு கட்டட தொழிலாளர்கள் கூரையின் மேல் ஏறி பயணம் செல்லும் நிலை தான். ஆனால் கிட்டத்தட்ட இந்த ஆறு வருடங்களில் ஏற்பட்ட சாலை முன்னேடங்களை பார்த்தால் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது. இன்னும் பல இடங்களில் கேபிள் பதித்த பள்ளங்கள் மூட படவில்லை . SRPTOOLS தொடங்கி கேளம்பாக்கம் வரையிலும் இன்னும் ஒரு பயணிகள் நிழற்குடை கூட இல்லாத நிலை தான். இப்போது தான் மக்கள் நடந்து செல்லும் பாதையில் ஓடுகள் பதிகிறார்கள். இந்த பணி இன்னும் எதனை ஆண்டுகள் அகபோகிறதோ.

சாலை ஓர கடைகள் தொடங்கி விண்ணை முட்டும் கட்டடங்கள், ப்ளாட்டுகள் என பெருகி விட்ட போதும் இன்னும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது. இப்போது VAN களை காண முடிவதில்லை, ஆனால் பஸ் எண்ணிக்கைகள் அதிகமாக்க படுகின்றன. ஆனாலும் மக்கள் கூடம் தினமும் அலை மோதுகிறது. கிழக்கு தாம்பரம் இல் இருந்து திருவன்மயுர் வரை செல்லும் T51 பேருந்துகள் கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கு ஒருமுறை இயக்க பட்டாலும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை.

மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்த பாதை இல்லை, மோனோ ரயில் முதல் இரண்டு phase களிலும் OMR க்கு இடம் இல்லை. பெருங்குடி வழியாக செல்லும் ECR ரயில் லைன் இன்னும் 6 ஆண்டுகள் ஆகியும் சர்வே கூட செய்ய படவில்லை.

இப்போதைக்கு தற்காலிகமாக இந்த பணிகளை தமிழக அரசு செய்தால் மக்களுக்கு நல்ல பயன்பாட்டை தருவதாக இருக்கும்.

1 . நடை பாதை அமைக்கும் பணி (SRPTOOLs இருந்து குறைந்த அளவு NAVALUR வரை)
2 . பேருந்து நிழற்குடைகள் (SRPTOOLs இருந்து கேளம்பாக்கம் வரை)
3 . சில புதிய பேருந்து வழித்தடங்கள் (த.நகர் , மெரினா, கோயம்பேடு, Tambaram மற்றும் கிண்டி மட்டுமே சொல்ல கூடிய அளவில் இணைக்க பட்டுள்ளன. இன்னும் Egmore , புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகியன.
4.சின்ன மலை வரை MRTS வசதி நீடிக்க பட வேண்டும்.
5 பேருந்து நிறுத்தங்களை ஒட்டி இருக்கும் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூட படவேண்டும்..

Shrinking the size of Oracle Virtual Box

First, zero fill your virtual disk. Boot the VM and run: sudo dd if=/dev/zero of=/bigemptyfile bs=4096k status=progress sudo rm -f /bigempty...