


கங்கை கொண்ட சோழ புரம்
கி. பி 1100 களில் ஏறத்தாழ திராவிட நாடு முழுவதுக்கும் தலை நகரமாய் இருந்த ஒரு தலை சிறந்த நகரம். அருள் மொழி வர்மர் என்றும் ராஜராஜசோழன் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் வழங்க படும் சிவபதாசேகாரனென பின்னாளில் அழைக்கப்படும் ராஜராஜசோழனின் புதல்வர் ராஜகேசரி ராஜேந்திர சோழனின் கைவண்ணத்தில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைநகரம்.பிற்கால சோழர் வரலாறில் முக்கியமான ஒரு நகரமாகவும் தலைநகரமாகவும் இருந்த சிறந்த ஒரு ஊர் கங்கை கொண்ட சோழபுரம். இன்றைய நிலையில் ஒரே ஒரு கோவிலும் சில வீடுகளுமாய் ஒரு சின்ன சிறிய கிராமமாய் இருப்பதாய் பார்த்தாலே மனதை நெருடுகிறது.
பொன்னேரி என்கிற பெரிய ஏரியின் 1 மைல் தொலைவுக்குள் ஜெயம்கொண்ட சோழபுரத்தில் இருந்து 10
கிலோ மீட்டரில் இருக்கிறது. பேரரசர் ராசராசன் களம் வரை தஞ்சாவூர் தலைநகரமாக இருந்தது. ராசராசனின் 53 வயதில் அரசு பொறுப்பை ஏத்த ராஜேந்திர சோழரின் களத்தில் இந்த நகர் ஒரு திட்டமிடலுடன் ஊருவாக்க படுகிறது.
இந்த பெருநகரத்தை சுற்றி மதில் சுவர் இருந்ததை கோவிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கிறது . பேராசிரியர் நாகசாமி அவர்களும் நகரத்தை சுற்றி இரண்டு மதில் சுவர்கள் இருந்ததை கல்வெட்டுகள் குறிப்பதாக அவரின் கங்கை கொண்ட சோழபுரம் நூலில் எழுதிவுள்ளார். ஒரு வெளிவட்ட சுவர் ராஜேந்திர சோழ மதில் என அறிய படுகிறது. மற்றொரு மதில் வுட்படி வீடு மதில் என அழைக்க படுகிறது.
அரசரின் மாளிகை சோழ கேரளன் திருமாளிகை என கல்வெட்டுகளால் அறிய படுகிறது. பேராசிரியர் நாகசாமி அவர்கள் இந்த மதில்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டதாக விரைகிறார். இதற்கு சான்தாக கோவிலின் அருகில் மாளிகைமேடு என்ற இடத்தில கிடைத்த செங்கற்கள் விளங்குகிறது. இது மட்டும் அன்றி சீனா பாண்டங்கள் இரும்பு ஆணிகள், இரும்பு ஆயுதங்கள், மேலும் மேற்கூரை அமைக்க பயன்படுத்தும் சிறிய செங்கற்கள் கிடைத்துள்ளன. இதனை ராஜேந்திர சோழன் சைட் museum இல் காணமுடிகிறது.
பிற்கால சோழ ஆட்சியில் அதிக ஆண்டுகள் தலைநகராக இருந்த பெருமைக்கு கங்கை கொண்ட சோழபுரம் உரித்தானது. செயம் கொண்டரால் கங்கபுரி என்று அழைக்கப்பட்ட மாநகரம். மேலும் பிற்கால சோழர்களின் கடைசி தலைநகரவும் இருந்து பெருமை பெற்ற நகரம்.
நகரமைப்பு:
ராஜேந்திர சோழனால் திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு மாநகரம். நகரை சுற்றிலும் மதில் சுவர் இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் பெற முடிகிறது. ( ராசேந்திரன் பெருமதில்) . இந்த சுவரின் மிச்சங்கள் தம் இப்போது காண முடிகிறது. ஏதேனும் விரிவான தொல்லியல் அகழாய்வு நடக்கும் பொது இன்னும் விரிவான தகவல்கள் கிடைக்கும். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இந்த மாநகரினுள் கண்டிப்பாக பல மாளிகைகள் இருந்திருக்க கூடும். அவற்றின் சுவடுகள் கூட நமக்கு கிடைக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இப்போதைக்கு மாளிகைமேடு என்ற இடத்திலுள்ள மிச்சங்கள் இரு பெரிய சுவர்கள் இருப்பதை உணர்த்தும். இந்த நகரின் தண்ணீர் தேவைகளை இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடவாறு தீர்த்து வைத்ததாக தெரிகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம்.
இப்போதைக்கு கங்கை கொண்ட சோழ புறம் பெயரை தாங்கி நிற்பது, தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக, அதை போன்றே வடிவமைக்க பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயில் தான். வடிவமைப்பில் சிறு மாறுதல்கள் இருந்தாலும் பார்த்த உடனே தஞ்சை கோவில் போலவே தோன்றுகிறது. ஜெயம் கொண்ட சோழபுரத்தில் இருந்து கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலை இணைக்கும் சாலையில் சுமார் ஒன்பதாவது கிலோ மீட்டரில் நம்மை வரவேற்கும் பொன்னேரி வரும் போதே கோபுரம் நம்மை பரவச மூட்டுகிறது. கோவிலின் நுழை வாயில் ஒன்றே கோவிலின் இன்றைய நிலைமையை சொல்லி விடுகிறது. கோவிலின் முகப்பில் கோட்டை தளம் போல உள்ள பகுதி பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க உருவாக்க பட்டதாகும். அதுவும் இந்த கோவிலின் அழகு சிதைவுக்கு ஒரு காரணமாகி விடுகிறது. இது மட்டும் அல்லாமல், பிரிட்டிஷ் ஆட்சியில், இதன் பெருமை அறியாத வெள்ளைக்கார அதிகாரிகளால் இங்கிருந்த கற்கள் பெயர்த்து அணைகட்ட பயன்படுத்த பட்டன. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த அழிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கங்கை கொண்ட சோழ மாநகரம் சோழர்களின் வீட்சிகுபின் அதன் பெருமை இழந்தது. அது நாள் வரை அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய இனம் சுந்தர பாண்டியரின் படை எடுப்பினால் வீறு பெட்டு, சோழர் ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. பாண்டிய படைகளின் வெற்றியால் கங்கை கொண்ட சோழ மாநகரம் சிதைவுக்கு ஆளானது. பண்டைய மன்னர்களின் இறை பக்தியால் நம்முடைய சோழீஸ்வரம் மட்டும தப்பி பிழைத்தது நமது பாக்கியமே. கங்கை கொண்ட சோழபுரத்தை கை பற்றிய உடனே சுந்தர பாண்டியனின் ஆலய பிரவேசத்தை கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். ( கல்வெட்டு சுந்தர பாண்டியனின் பெயரால் ஒரு கால பூசை உருவாகபட்டதை சொல்கிறது.) இது மட்டும் இன்றி சுந்தர பாண்டியனின் வழி தூண்டல்களின் கல்வெட்டுகளும் இருகிண்டன. இப்போதைய கோவில் தொல்பொருள்துறை பராமரிப்பில் உள்ளது. கோவிலின் உள்பகுதி முழுவதும் புல்வெளி பராமரிக்க படுகிறது. தொல்லியல் துறை முடிந்த வரை கோவிலை பராமரித்து வருகிறது. கோவிலின் உள்ளே நுழையும் பொது நம்மை ஈரடுக்கு வாசல் வரவேற்கிறது. அதன் பின்னே ஒரு கொடிமரத்தின் அடிபாகம் மட்டும் காண கிடைகிறது. அதற்ரோப்புரம் நந்தி வணக்கம் சொல்கிறது.
கோவிலின் இடப்புறம் உள்ள வழிபாட்டு மண்டபங்கள் உருக்குலைந்து காணபடுகிறது. அதில் உள்ள வாயில் காப்போன் சிலைகள் சேத படுத்த பட்டுள்ளன. அந்த மண்டபத்தில் தொல்லியல் துறை மீள்கட்டமைக்க முயன்று ஆனால் தோல்வி கண்டுள்ளது. இதனை அங்கே காணும் கற்குவியல்களால் அறியலாம். இடப்புறம் உள்ள பிரகாரம் அனைத்தும் இல்லை. இந்த கற்கள் தாம் வெள்ளையர்களால் அப்புறபடுத்த பட்டன. மேலும் இந்த பகுதியில் உள்ள தென் கயிலாயம் வவ்வால் அடைந்து, பழைய பொருட்களின் சேமிப்பிடமாக உள்ளது. நான் வாயில் காப்போன் சிலையை நிழல்படம் எடுக்கும் பொது வவ்வால் அதிகம் பறப்பதை பார்த்தேன்.
எப்படி என்றால் ஒரு நூறாவது பறக்கும் சத்தம் கேட்டது. தென் கயிலாய கருவறையினுள் ஏதும் சிலைகள் இருப்பதாக தெரியவில்லை. அதன் முற்புறம் கல்கள் குவிக்க பட்டு இருந்தது. அனேகமாக தொல்லியல் துறையினரால் அடுக்க முடியாத கல்கள் என நாங்கள் பேசி கொண்டோம். கோவிலின் தெற்கு பிரகாரம் முழுமையும் வெறுமையாக காட்சி அளித்தது மனதுக்கு வலித்தது. எத்தனையோ நூற்றாண்டு கடந்த கோவில், இப்படி ௧௫௦ ஆண்டுகளில் சிதைந்து விட்டதே என்று. தென்கிழக்கு மூலையில் கோட்டை வடிவிலான ஒரு பிற்கால அமைப்பு காணபடுகிறது. பிற்காலங்களில் உடையார் பாளையம் ஜமீன்
1 comment:
திராவிட ஆட்சியில் அழிந்த / அழித்த ராசராசன் நகர வளாகம். https://www.youtube.com/watch?v=7yuxx0Hatk0&fbclid=IwAR2JsqTAu-WdO7h3qrkGAJhck0zTVXhA4iAmOSOey5AgKL8_P7XpI6EAqP0
Post a Comment