Monday, 13 February 2017

How to Export to CSV file with Delimiters other than Comma

In earlier version of Excel (before Excel 2010) we dont have an option to select the delimiter to save the file as CSV. Only a user can save with comma delimiter or space delimiter.

however if you have a requirement to create a Pipe Delimited or & delimited csv files, you can do it by following the below steps.

This will work only for Windows 7 / XP and MS Office 2007 packages.

  1. Close your Excel
  2. Navigate to control panel, Select ‘Region and Language’
  3. Click the ‘Additional Settings’ button
  4. Find the List separator and change it from a comma to your preferred delimiter such as a pipe (|).
  5. Exit Control panel
  6. Open the Excel file you want to export to a pipe delimited file
  7. Select File, Save As
  8. Change the ‘Save as type’ to ‘CSV (Comma delimited)(*.csv)’
  9. Change the name and file extension if you want, by default stays as csv even though a different delimiter
  10. Click Save
  11. Click OK
  12. Click Yes

Wednesday, 1 February 2017

Updates on Track Doubling between Ariyalur & Villupuram:

SR General Manager visited the new laid second track between Ariyalur & Villupuram.

Here are few images from Twitter.

 The below photo is disgusting . Is SR dont have any motorized Trolleys?.









Tuesday, 31 December 2013

நம்மாழ்வார்




மண் வளம் காத்தவரே
மழை வளம் காத்தவரே
இயற்கை உரம் கற்பித்து
இயற்கைக்கு உரம் ஊட்டியவரே
DAP, Urea இவை எல்லாம் உரமல்ல - நஞ்சு என்றும்
DDT, இதர பூச்சி கொல்லிகள் எல்லாம் - உயிர் கொல்லிகள் என்றும்
பசுமை புரட்சி உழவனுக்கு அல்ல உர நிறுவனகளுக்கு என்றும்
புரிய வைத்தவர்ஏ.
மண்ணுக்கு உம் உடல் கொடுத்து
இயற்கைக்கு உம் உயிர் கொடுத்து
எங்களுக்கு வேளாண் விதை ஊன்றிய 
தங்கமே - உமக்கு என்றுமே உள்ளத்தால் அழிவில்லை.

Friday, 21 September 2012

போபால் மாதிரி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி -

போபால் மாதிரி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி -

௧. மொதல்ல அங்க இருக்கிற ரஷ்யன் scientists  எ பாதுகாப்பா அனுப்புவோம்

௨. அப்புறம் போன போகுதுன்னு அங்க இருக்கிற இந்தியன் scientists அனுப்புவோம்

௩. பிரதமர் கிட்ட சொல்லி ஒரு எளவு கடிதம் அனுப்புவோம்

௪. போர்கால அடிபடையில் மீட்பு பணிகள் தீவிரம் நு செய்தி கொடுப்போம்

௫. அப்புறம் ---மக்கள் மீட்கப்பட்டனர் நு ஒரு டிவி ல சொல்லிடுவோம்

௬. பிஜேபி இந்த விபத்துக்கு ரஷ்ய தான் காரணம்னு சொல்லும், அவங்களுக்காக ஒரு கமிட்டி போட்ருவோம்.

௭. எடுபிடி அப்துல்கலாம விட்டு கதிர்வீச்சு ஒன்னும் இல்ல, அதனால கூடன்குலதுல நடந்தது விபத்தே இல்லன்னு சொல்ல சொல்லுவோம்

௮. நாராயண சாமிய விட்டு வெளிவந்தது கடல் நீர் தான் , கதிர்வீச்சே இல்லன்னு பேட்டி கொடுத்துருவோம்

௯. தினமலம் பேப்பர் ல கூடங்குளத்தில் விபத்தா, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை நு தலைப்பு செய்தி கொடுத்திரலாம், அதுல பெட்டி செய்தியா வல்லரசு நாயகன் அப்துல் கலாம் எடுப்ப போட்ருலம்

Tuesday, 24 January 2012

சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு -2

சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு -2

சென்ற பதிவில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை யான ரெட்டை ரயில் பாதை பணிகளை அறிந்தோம். இப்போது திருச்சி முதல் கன்னியாகுமரி வரையிலான ரெட்டை ரயில் பாதை பணிகளை அலசுவோம். 


சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் அதிக தூரம் ரெட்டை பாதை இருப்பது மதுரை முதல் திண்டுகல் வரையான பகுதி. இந்திய விலேயே டிராபிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள பகுதியாக மாறி  , பல தடைகளுக்கு இடையே ரெட்டையாகப்பட்ட பாதை. அதற்கு முன்னால் சுமார் நெரிசல் மிகுந்த நேரங்களில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம் எடுத்த பகுதி இது. ஆனால் இப்போது ஒரு மணி , பத்து நிமிடங்களில் செல்ல முடிகிறது. 


ஆனால் திண்டுக்கல் முதல் திருச்சி வரையிலான பகுதியில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரே ஒரு அறுதல் என்ன வென்றல் , இந்த பகுதியை ரெட்டை பாதையாக மாற்ற நிதி ஒதுகபட்டுளது என்பது மட்டுமே. ஆனால் இந்த நிதி , அரியலூர் - வாளாடி இடையே பணிகள் விரைவு படுத்த பட்டுள்ளதால் , அங்கு செலவிடப்படும் என்று நினைக்கின்றேன் . இந்த பாதையிலும் சில பகுதிகள் பாறைகள் மிகுதியை இருப்பதால் பணிகள் தொடங்கவும் முடியவும் அதிக காலம் எடுக்கும். 

சென்னை முதல் திண்டுக்கல் வரை இப்போது மின் மயமாக்கம முடிவு அடைந்திருப்பதால் இப்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், சில நாள்களில் நெல்லை எக்ஸ்பிரஸ், முதுநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மின்சார என்ஜின் கொண்டு இயக்க படுகின்றன.இது குறைந்த அளவு நேரம் குறைவதோடு , சத்தமும் குறைகிறது. திண்டுக்கல் தாண்டி தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் திண்டுக்கலில் என்ஜின் மாற்றி செல்கின்றன. இது தான் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் முதன் மின் பாதை.


மதுரை - திண்டுக்கல் பாதை ரெட்டையாக்க பட்டதால் சென்னை செல்லும் ரயில்கள் மட்டும் அல்லது, தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரமும் குறைந்துள்ளது. 

மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான பகுதி இப்போது ரயில் நெரிசல் அதிகம் உள்ள பகுதியாக மாறி உள்ளது. இதன் மூலம் புதிய ரயில்கள் விடுவது கனவாக மாறி போய் உள்ளது. இதன்மூலம் தெற்கு ரயில்வே மிக எளிதாக மக்களின் உண்மையான புதிய ரயில் வேண்டுகோள்களை நிராகரித்து விடுகிறது. இது மிகவும் கவலைக்குரிய செய்தி. விருதுநகர் - மணியாச்சி வரையிலான பாதையை விட இது நெரிசல் அதிகமவதுற்கு காரணம் செங்கோட்டையில் இருந்து வரும் பயணிகள் ரயில் மட்டுறம் பொதிகை விரைவு வண்டி. செங்கோட்டையில் இருந்து மேலும் ரயில்கள் இயக்க படவேண்டும் என்றால் விருதுநகர் - மதுரை பாதை மிக விரைவில் ரெட்டை பாதை ஆக வேண்டும். விசித்திரம் என்ன வென்றால் இதற்கு இன்னும் ஒப்புகை வழங்கப்பட வில்லை. விருதுநகர், ராஜபாளையம், தென்காசி MP கள் ஒருசேர போராட்டம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். 

இதே நிலை தாம் விருது நகர் இல் இருந்து நாகர்கோயில் வரை.  இந்த பாதையில் புதிய ரயில் கோரிக்கை வரும் போது, தெற்கு ரயில்வே மிக எளிதாய் நிராகரித்து விடுகிறது. ஆனால் இந்த பாதையை ரெட்டையக்க இன்னும் வரைவு அறிக்கைள் கூட ஒப்புகை பெறப்பட வில்லை. 

எதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாடு கோட்டாவில் ரயில் சேவை வாங்கும் கேரளா நரி தந்திரம். ஒவ்வொரு budget கண்டிப்பாக ரெண்டு ரயில்கள் திருநெல்வேலி அல்லது நாகர்கோயில் இருந்து வடமாநிலங்களுக்கு அறிவிக்க படும். ஆனால் இவை அனைத்தும் திருவனத்தபுரம் , பாலக்காடு வழியே இயக்க படும். இதற்காகவே திருநெல்வேலியில் ரயில்களை பராமரிக்கும் / சுத்தப்படுத்தும பிட் லைன் அமைகபட்டுளது. இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல. அதே போல் திருவனந்தபுரம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள ரயில் பாதை திருவந்தபுரம் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது. இதனால் இன்னும் நாகர்கோயில் ரயில் நிலையத்தின் ஒரு நடைபாதை செம்மண் தரையாக உள்ளது.
நாகர்கோயில் Junction

மலையாள ஆதிக்கம் எந்த அளவு உள்ளது என்றால் ஒரு எடுத்துகாட்டு: கொஞ்ச நாளைக்கு முன் செய்திகளில் இந்தியாவில் மிக நீளமான் ரயில் சேவை கன்னியாகுமரியில் இருந்து திப்ரோகர் வரை செல்லும் ரயில் என அறிவிக்க பட்டது. இந்த ரயில் அசாமில் இருந்து கேரளாவை தொடும் வரை வங்காள விரிகுடா கடலை ஒட்டியே வரும் . ஆனால் பின்னர் சம்மந்தமே இல்லாமல் கேரளாவுக்கு சென்று திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும். இந்த ரயில் நமக்கு தேவை இல்லை, ஆனால் நம்  பணத்தை கேரளா மொய் எழுதி விட்டது அதன் பெயரில்.
டில்பர்க விவேக் எக்ஸ்பிரஸ்



இதே போல் நாகர்கோயில் பெங்களூர் Island எக்ஸ்பிரஸ் , Tirunelveil - ஹப்பா எக்ஸ்பிரஸ்,   திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் - காந்திகம் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஜம்மு செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், இவை அனைத்தும் கேரளா கொஞ்சும் தமிழ்நாட்டு ரயில்கள். இந்த திருட்டுத்தனம் தான் நாகர்கோயில் - மதுரை பாதை ரெட்டை மயமாக்கலை எதிர்கிறது. 

அடுத்த பதிவு  - கோயம்புத்தூர் புறகணிக்க படும் மர்மம்.

Friday, 20 January 2012

சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு - 1


சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு - 1

      ரயில்வே துறை என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கருதுவது கிடையாது. எவ்வளவு தான் கூட்டம் வந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் விடுவது தான் ரயில்வே உயர் அதிகாரிகளின் வேலை. இதில் கேரளத்து அதிகாரிகளின் வஞ்சம் வேறு. 

 ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாநிலத்திற்கு குறைந்த பட்ச புதிய ரயில் வசதிகளை அறிவிப்பது ரயில்வே வரவு செலவு அறிக்கையின் ஒரு பகுதி. இது தவிர மீட்டர் gauge பாதையை அகல பாதையாக மாற்றுவதற்கான நிதி, புதிய பாதைகளுக்கங்கான நிதி ஒதுக்கீடு, புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட வரைவு ஒப்புதல் மற்றும் ரயில்வே பணிமனை விரிவாக்கம், மின் பாதை அமைப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பங்கினை ஒதுக்குவது வழக்கம். தமிழகம் அமைந்துள்ள தென்னக ரயில்வே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மற்ற எல்லா ரயில்வே மண்டலங்களும் சிறப்பாக இயங்க, இதன் நிலை மோசமாய் வருகிறது. இதற்கு காரணம் சரக்கு போக்குவரத்து வருவாய் குறைவு என்ற காரணம் கூறபட்டாலும் இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் வழித்தடங்களில் இன்னும் பல மீட்டர் guage ஆகவே இருகின்றன . 



தமிழ்நாட்டின் முதுகெலும்பாய்  வளைந்து செல்லும் சென்னையில் இருந்து விழுப்புரம் , அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழிதடம் இன்னும் ஒரு வழி பாதையாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாவட்டங்களி இணைக்கும் இந்த பாதை இரட்டை ஆக்க போதுமான நிதி ஒதுக்கபடுவது இல்லை. இன்னும் மதுரையில் இருந்து நாகர்கோயில் செல்லும் பாதைக்கு வரைவு கூட ஒப்புகை பெறவில்லை. 

நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி விரைவு வண்டி, பொதிகை விரைவு வண்டி, முத்து நகர் விரைவு வண்டி , வைகை விரைவு வண்டி, பல்லவன் விரைவு வண்டி ஆகியவை பொங்கி வழிந்தாலும் கூட அதிக ரயில்கள் இயக்கபடுவதும் இல்லை , இயக்க முடிவதும் இல்லை. 2007 இல் தொடங்கிய செங்கல்பட்டு - விழுப்புரம் ரெட்டை பாதை வெறும் 7 கிலோமீட்டர் மட்டுமே முடிவடைந்துள்ளது வெட்க கேடானது. இந்த ஆண்டின் மேலும் 20 கிலோமீட்டர் பாதை முடிவடையும் என்று அறிக்கை வேறு. 


விழுப்புரம் - விருத்தாசலம் பாதையில் சென்ற ஆண்டு இறுதியில்  வேலை ஆரம்பிக்க பட்டுள்ளது.  ஆனால் எங்கும் நிலம் சமபடுத்த படவில்லை. பால பணிகள் மட்டுமே நடக்கின்றன. விருத்தாசலம் - அரியலூர் இடையே இன்னும் ஒரு துரும்பு கூட கிள்ளி போடா படவில்லை.

 அரியலூர் - வாளடி இடையே நல்ல வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த இடம் தான் தென் மாவட்ட ரயில்களின் பயணத்தில் முக்கியமான இடம். இந்த இடங்கள் சிக்னல் கிடைக்காமல் அணைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டிய கட்டாயம். இதன் மூலம் பயண நேரம் அதிகமாகிறது. வாளடி - திருச்சி இடையே கொள்ளிடம் நதி பால வேலைகள் இப்போது ஆரம்பித்துள்ளான. இது தவிர காவேரி ஆற்று பாலம் புதிதாக செய்ய வேண்டும்.

கொள்ளிடம் ஆற்று பால வேலை.



திருச்சி சந்திப்பில் , நிலையத்தின் நிலை மிகவும் மோசம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள மீட்டர் gauge பாதைகள் இன்னும் மாற்ற படாமல் உள்ளன. இவற்றை மாற்றி அமைக்கும் போது  நமக்கு இன்னும் இரண்டு பிளாட்போர்ம் கிடைக்கும்.




 நாளை தொடருவோம் 



Thursday, 19 January 2012

திடீர் குளிரும் தமிழ்நாடும்

திடீர் குளிரும் தமிழ்நாடும். 

        தானே புயலுக்கு அப்புறம் நிகழும் பருவ நிலை மாற்றத்தால் தமிழ்நாடு, மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள் யாவும் அதிக குளிரினால் பாதிக்க பட்டுள்ளன. தானே புயல் ஓய்ந்து ஜன 12 வரையிலும் வெம்மையான வானிலை தமிழ்நாடு எங்கும் காணப்பட்டது. கிட்டத்தட்ட 4 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு இந்திய பெருங்கடலில் நிலவும் குளிர் அலை (coldwave ) காரணமாக எல்லா பகுதிகளிலும் வெப்பம் வெகுவாக இறங்கிபோனது. குறைந்த பட்சமாக திருபதூரில் 11 டிகிரி centrigrade அளவாகி போனது. கடுமையான குளிர் காரணமாக ஆந்திரா மாவட்டங்களில் சுமார் 15 வரை இறந்து போனதாக செய்திகள் வருகின்றன. எப்போதும் பொங்கல் வாரத்தில் சென்னை யில் சுமார் 20degree centrigrade அக இருக்கும் வெப்பநிலை 18degree க்கும் கீழே இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.




 
            சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி நேற்று தமிழ்நாட்டின்  அதிகபட்ச் குறைந்த வெப்பநிலை 20 டிகிரி, உணரப்பட்ட இடம் கன்னியாகுமரி. மீனம்பாக்கத்தில் குறைந்த பட்சமாக 17.5degree யாக இருந்தது. சராசரியாக சுமார் -4degree வரை வெப்பநிலை குறைந்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிலையே தமிழ்நாடு முழுமைக்கும் நீடிக்கும். நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மூடுபனி காணப்படும். 

            பிற வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்களின் கணிப்பு படி இந்த நிலை வரும் செவ்வாய் கிழமை வரை நீடிக்கும் என்றே தெரிகிறது. அதுவரை குறித்த பட்ச வெப்பநிலை சுமார் 20degree அல்லது அதுக்கும் கீழே இருக்கும். அதன்பின்னர் மெதுவாக 23degree என்ற நிலையை அடையும்.

 

            இந்த பனி மூட்டம் பலருக்கும் பாதிப்பு ஏற்பதுவதகவே உள்ளது. குழந்தைகள், ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகாலை நடைபயிற்சி செய்பவர்கள், முதியவர்கள், உடல் நலம் குன்றியோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் நெல் பயிர் இந்த கடும் குளிரினால் பாதிப்படையும். இதன் மூலம் நெல் பயிரில் நோய் தாக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு இது இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும். .


 




Shrinking the size of Oracle Virtual Box

First, zero fill your virtual disk. Boot the VM and run: sudo dd if=/dev/zero of=/bigemptyfile bs=4096k status=progress sudo rm -f /bigempty...