சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு - 1
ரயில்வே துறை என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கருதுவது
கிடையாது. எவ்வளவு தான் கூட்டம் வந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
விடுவது தான் ரயில்வே உயர் அதிகாரிகளின் வேலை. இதில் கேரளத்து அதிகாரிகளின்
வஞ்சம் வேறு.
ஒவ்வொரு
ஆண்டிற்கும் ஒரு மாநிலத்திற்கு குறைந்த பட்ச புதிய ரயில் வசதிகளை
அறிவிப்பது ரயில்வே வரவு செலவு அறிக்கையின் ஒரு பகுதி. இது தவிர மீட்டர்
gauge பாதையை அகல பாதையாக மாற்றுவதற்கான நிதி, புதிய பாதைகளுக்கங்கான நிதி
ஒதுக்கீடு, புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட வரைவு ஒப்புதல் மற்றும்
ரயில்வே பணிமனை விரிவாக்கம், மின் பாதை அமைப்பதற்கு ஒவ்வொரு
மாநிலத்திற்கும் ஒரு பங்கினை ஒதுக்குவது வழக்கம். தமிழகம் அமைந்துள்ள
தென்னக ரயில்வே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மற்ற எல்லா ரயில்வே
மண்டலங்களும் சிறப்பாக இயங்க, இதன் நிலை மோசமாய் வருகிறது. இதற்கு காரணம்
சரக்கு போக்குவரத்து வருவாய் குறைவு என்ற காரணம் கூறபட்டாலும் இன்னொரு
காரணமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் வழித்தடங்களில் இன்னும் பல
மீட்டர் guage ஆகவே இருகின்றன .
தமிழ்நாட்டின்
முதுகெலும்பாய் வளைந்து செல்லும் சென்னையில் இருந்து விழுப்புரம் ,
அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழிதடம் இன்னும் ஒரு வழி
பாதையாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாவட்டங்களி
இணைக்கும் இந்த பாதை இரட்டை ஆக்க போதுமான நிதி ஒதுக்கபடுவது இல்லை.
இன்னும் மதுரையில் இருந்து நாகர்கோயில் செல்லும் பாதைக்கு வரைவு கூட
ஒப்புகை பெறவில்லை.
நெல்லை
எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி விரைவு வண்டி, பொதிகை விரைவு வண்டி, முத்து நகர்
விரைவு வண்டி , வைகை விரைவு வண்டி, பல்லவன் விரைவு வண்டி ஆகியவை பொங்கி
வழிந்தாலும் கூட அதிக ரயில்கள் இயக்கபடுவதும் இல்லை , இயக்க முடிவதும்
இல்லை. 2007 இல் தொடங்கிய செங்கல்பட்டு - விழுப்புரம் ரெட்டை பாதை வெறும் 7
கிலோமீட்டர் மட்டுமே முடிவடைந்துள்ளது வெட்க கேடானது. இந்த ஆண்டின் மேலும்
20 கிலோமீட்டர் பாதை முடிவடையும் என்று அறிக்கை வேறு.
விழுப்புரம் - விருத்தாசலம் பாதையில் சென்ற ஆண்டு இறுதியில் வேலை ஆரம்பிக்க பட்டுள்ளது. ஆனால் எங்கும் நிலம் சமபடுத்த படவில்லை. பால பணிகள் மட்டுமே நடக்கின்றன. விருத்தாசலம் - அரியலூர் இடையே இன்னும் ஒரு துரும்பு கூட கிள்ளி போடா படவில்லை.
அரியலூர் - வாளடி இடையே நல்ல வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த இடம் தான் தென் மாவட்ட ரயில்களின் பயணத்தில் முக்கியமான இடம். இந்த இடங்கள் சிக்னல் கிடைக்காமல் அணைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டிய கட்டாயம். இதன் மூலம் பயண நேரம் அதிகமாகிறது. வாளடி - திருச்சி இடையே கொள்ளிடம் நதி பால வேலைகள் இப்போது ஆரம்பித்துள்ளான. இது தவிர காவேரி ஆற்று பாலம் புதிதாக செய்ய வேண்டும்.
![]() |
கொள்ளிடம் ஆற்று பால வேலை. |
திருச்சி சந்திப்பில் , நிலையத்தின் நிலை மிகவும் மோசம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள மீட்டர் gauge பாதைகள் இன்னும் மாற்ற படாமல் உள்ளன. இவற்றை மாற்றி அமைக்கும் போது நமக்கு இன்னும் இரண்டு பிளாட்போர்ம் கிடைக்கும்.
நாளை தொடருவோம்
No comments:
Post a Comment