திடீர் குளிரும் தமிழ்நாடும்.
தானே புயலுக்கு அப்புறம் நிகழும் பருவ நிலை மாற்றத்தால் தமிழ்நாடு, மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள் யாவும் அதிக குளிரினால் பாதிக்க பட்டுள்ளன. தானே புயல் ஓய்ந்து ஜன 12 வரையிலும் வெம்மையான வானிலை தமிழ்நாடு எங்கும் காணப்பட்டது. கிட்டத்தட்ட 4 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு இந்திய பெருங்கடலில் நிலவும் குளிர் அலை (coldwave ) காரணமாக எல்லா பகுதிகளிலும் வெப்பம் வெகுவாக இறங்கிபோனது. குறைந்த பட்சமாக திருபதூரில் 11 டிகிரி centrigrade அளவாகி போனது. கடுமையான குளிர் காரணமாக ஆந்திரா மாவட்டங்களில் சுமார் 15 வரை இறந்து போனதாக செய்திகள் வருகின்றன. எப்போதும் பொங்கல் வாரத்தில் சென்னை யில் சுமார் 20degree centrigrade அக இருக்கும் வெப்பநிலை 18degree க்கும் கீழே இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.
சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி நேற்று தமிழ்நாட்டின் அதிகபட்ச் குறைந்த வெப்பநிலை 20 டிகிரி, உணரப்பட்ட இடம் கன்னியாகுமரி. மீனம்பாக்கத்தில் குறைந்த பட்சமாக 17.5degree யாக இருந்தது. சராசரியாக சுமார் -4degree வரை வெப்பநிலை குறைந்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிலையே தமிழ்நாடு முழுமைக்கும் நீடிக்கும். நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மூடுபனி காணப்படும்.
பிற வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்களின் கணிப்பு படி இந்த நிலை வரும் செவ்வாய் கிழமை வரை நீடிக்கும் என்றே தெரிகிறது. அதுவரை குறித்த பட்ச வெப்பநிலை சுமார் 20degree அல்லது அதுக்கும் கீழே இருக்கும். அதன்பின்னர் மெதுவாக 23degree என்ற நிலையை அடையும்.
இந்த பனி மூட்டம் பலருக்கும் பாதிப்பு ஏற்பதுவதகவே உள்ளது. குழந்தைகள், ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகாலை நடைபயிற்சி செய்பவர்கள், முதியவர்கள், உடல் நலம் குன்றியோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் நெல் பயிர் இந்த கடும் குளிரினால் பாதிப்படையும். இதன் மூலம் நெல் பயிரில் நோய் தாக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு இது இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும். .
No comments:
Post a Comment