சென்னை - கன்னியாகுமரி ரெட்டை ரயில் பாதை - ஏமாறும் தமிழ்நாடு -2
சென்ற பதிவில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை யான ரெட்டை ரயில் பாதை பணிகளை அறிந்தோம். இப்போது திருச்சி முதல் கன்னியாகுமரி வரையிலான ரெட்டை ரயில் பாதை பணிகளை அலசுவோம்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் அதிக தூரம் ரெட்டை பாதை இருப்பது மதுரை முதல் திண்டுகல் வரையான பகுதி. இந்திய விலேயே டிராபிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள பகுதியாக மாறி , பல தடைகளுக்கு இடையே ரெட்டையாகப்பட்ட பாதை. அதற்கு முன்னால் சுமார் நெரிசல் மிகுந்த நேரங்களில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம் எடுத்த பகுதி இது. ஆனால் இப்போது ஒரு மணி , பத்து நிமிடங்களில் செல்ல முடிகிறது.
ஆனால் திண்டுக்கல் முதல் திருச்சி வரையிலான பகுதியில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரே ஒரு அறுதல் என்ன வென்றல் , இந்த பகுதியை ரெட்டை பாதையாக மாற்ற நிதி ஒதுகபட்டுளது என்பது மட்டுமே. ஆனால் இந்த நிதி , அரியலூர் - வாளாடி இடையே பணிகள் விரைவு படுத்த பட்டுள்ளதால் , அங்கு செலவிடப்படும் என்று நினைக்கின்றேன் . இந்த பாதையிலும் சில பகுதிகள் பாறைகள் மிகுதியை இருப்பதால் பணிகள் தொடங்கவும் முடியவும் அதிக காலம் எடுக்கும்.
சென்னை முதல் திண்டுக்கல் வரை இப்போது மின் மயமாக்கம முடிவு அடைந்திருப்பதால் இப்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், சில நாள்களில் நெல்லை எக்ஸ்பிரஸ், முதுநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மின்சார என்ஜின் கொண்டு இயக்க படுகின்றன.இது குறைந்த அளவு நேரம் குறைவதோடு , சத்தமும் குறைகிறது. திண்டுக்கல் தாண்டி தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் திண்டுக்கலில் என்ஜின் மாற்றி செல்கின்றன. இது தான் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் முதன் மின் பாதை.
மதுரை - திண்டுக்கல் பாதை ரெட்டையாக்க பட்டதால் சென்னை செல்லும் ரயில்கள் மட்டும் அல்லது, தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரமும் குறைந்துள்ளது.
மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான பகுதி இப்போது ரயில் நெரிசல் அதிகம் உள்ள பகுதியாக மாறி உள்ளது. இதன் மூலம் புதிய ரயில்கள் விடுவது கனவாக மாறி போய் உள்ளது. இதன்மூலம் தெற்கு ரயில்வே மிக எளிதாக மக்களின் உண்மையான புதிய ரயில் வேண்டுகோள்களை நிராகரித்து விடுகிறது. இது மிகவும் கவலைக்குரிய செய்தி. விருதுநகர் - மணியாச்சி வரையிலான பாதையை விட இது நெரிசல் அதிகமவதுற்கு காரணம் செங்கோட்டையில் இருந்து வரும் பயணிகள் ரயில் மட்டுறம் பொதிகை விரைவு வண்டி. செங்கோட்டையில் இருந்து மேலும் ரயில்கள் இயக்க படவேண்டும் என்றால் விருதுநகர் - மதுரை பாதை மிக விரைவில் ரெட்டை பாதை ஆக வேண்டும். விசித்திரம் என்ன வென்றால் இதற்கு இன்னும் ஒப்புகை வழங்கப்பட வில்லை. விருதுநகர், ராஜபாளையம், தென்காசி MP கள் ஒருசேர போராட்டம் செய்தால் மட்டுமே இது சாத்தியம்.
இதே நிலை தாம் விருது நகர் இல் இருந்து நாகர்கோயில் வரை. இந்த பாதையில் புதிய ரயில் கோரிக்கை வரும் போது, தெற்கு ரயில்வே மிக எளிதாய் நிராகரித்து விடுகிறது. ஆனால் இந்த பாதையை ரெட்டையக்க இன்னும் வரைவு அறிக்கைள் கூட ஒப்புகை பெறப்பட வில்லை.
எதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாடு கோட்டாவில் ரயில் சேவை வாங்கும் கேரளா நரி தந்திரம். ஒவ்வொரு budget கண்டிப்பாக ரெண்டு ரயில்கள் திருநெல்வேலி அல்லது நாகர்கோயில் இருந்து வடமாநிலங்களுக்கு அறிவிக்க படும். ஆனால் இவை அனைத்தும் திருவனத்தபுரம் , பாலக்காடு வழியே இயக்க படும். இதற்காகவே திருநெல்வேலியில் ரயில்களை பராமரிக்கும் / சுத்தப்படுத்தும பிட் லைன் அமைகபட்டுளது. இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல. அதே போல் திருவனந்தபுரம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள ரயில் பாதை திருவந்தபுரம் கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது. இதனால் இன்னும் நாகர்கோயில் ரயில் நிலையத்தின் ஒரு நடைபாதை செம்மண் தரையாக உள்ளது.
|
நாகர்கோயில் Junction |
மலையாள ஆதிக்கம் எந்த அளவு உள்ளது என்றால் ஒரு எடுத்துகாட்டு: கொஞ்ச நாளைக்கு முன் செய்திகளில் இந்தியாவில் மிக நீளமான் ரயில் சேவை கன்னியாகுமரியில் இருந்து திப்ரோகர் வரை செல்லும் ரயில் என அறிவிக்க பட்டது. இந்த ரயில் அசாமில் இருந்து கேரளாவை தொடும் வரை வங்காள விரிகுடா கடலை ஒட்டியே வரும் . ஆனால் பின்னர் சம்மந்தமே இல்லாமல் கேரளாவுக்கு சென்று திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும். இந்த ரயில் நமக்கு தேவை இல்லை, ஆனால் நம் பணத்தை கேரளா மொய் எழுதி விட்டது அதன் பெயரில்.
|
டில்பர்க விவேக் எக்ஸ்பிரஸ் |
இதே போல் நாகர்கோயில் பெங்களூர் Island எக்ஸ்பிரஸ் , Tirunelveil - ஹப்பா எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் - காந்திகம் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஜம்மு செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், இவை அனைத்தும் கேரளா கொஞ்சும் தமிழ்நாட்டு ரயில்கள். இந்த திருட்டுத்தனம் தான் நாகர்கோயில் - மதுரை பாதை ரெட்டை மயமாக்கலை எதிர்கிறது.
அடுத்த பதிவு - கோயம்புத்தூர் புறகணிக்க படும் மர்மம்.