உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததை விட அதிமுக உக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. பெங்களூர் கோர்ட் வெப்பத்தையும் மீறி இந்த காற்று அடித்ததில் முதல்வர் குளிர்ந்து போயிருப்பார். அதே போல் திரு சைதை துரைசாமி அவர்கழுக்கும் இன்று பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. ஒருவேளை திரு ஸ்டாலின் அவர்களை வென்றாலும் கூட MLA அல்லது ஒரு அமைச்சர் பதவியுடன் நின்று போய் இருக்கும்.
சட்டசபை தேர்தலில் உள்ள அதே அளவு பதிலீடு மக்களிடம் இருந்து ஜெ க்கு கிடைத்துள்ளது. அவருடைய சொத்து குவிப்பு வழக்கை மக்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. அதே நேரம் இந்த வழக்கின் பிடி இருகுவதாக தோன்றுகிறது.
மற்ற தேர்தல் முடிவுகள் போல் அல்லாமல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெகு நேரமாக போய் கொண்டே இருகின்றன . அனேகமாக நாளை நண்பகல் வரை இந்த முடிவுகள் தொடரும்.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து சில மணி நேரங்களிலே மாநகராட்சி நிலவரங்கள் தெரிந்து விட்டன. Vellore மட்டும் திமுக வசப்படும் என்று நினைத்தேன் அதுவும் 3vathu சுற்று முடிவுக்கு பின் மாயமானது.
தபால் ஓட்டுகள் இந்த முறை திமுக உக்கு அதிகம் கிடைத்தன. இது அரசு ஊழியர்கள் திரும்பவும் திமுக வரவை விரும்புவதை காட்டுகிறது.
அணைத்து கட்சிகளும் தனித்து களம் கண்டத்தில் , பல பேரின் சாயம் வெளுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும் என்று நேற்றுதான் திரு EVKS இளங்கோவன் கூறியதாக செய்தி. Vellore , தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் மட்டும் சொல்லிகொள்ளும் அளவுக்கு உள்ளது. மொத்தம் உள்ள மாநகராட்சி கவுன்சிலர் இடங்களில், இது வரை சுமார் 15 இடங்களை மட்டும் பிடித்து, கோஷ்டிக்கு 2 என உள்ளது.
திரு விஜயகாந்த் அவர்களின் DMDK பொறுத்த மட்டில் இதுஒரு கெட்ட கனவு போல் தோன்றுகிறது. பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் இடங்களில் மட்டுமே சொல்லும் அளவுக்கு கிடைத்துள்ளது. இதனை ஒப்பிடும் பொழுது 29 MLA பெரும் தகுதி இல்லை எனவே தோன்றுகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல் தான் கப்டனின் கதையை முடிவு செய்யும். வடிவேலு இந்த முறை பிரசாரத்துக்கு வந்திருந்தால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பார். திரு பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள் இம்முறை பிரசாரத்தில் ஈடு படவில்லை என்று நினைக்கிறன்.
திமுக பொருத்தமட்டில் இதுவும் ஒரு படுதோல்வி தான். நல்ல எண்ணிக்கையில் கவுன்சிலர்களை பெற்றாலும் அது அதிமுக எண்ணிக்கையில் பாதி கூட இல்லை என்பதே உண்மை. இனி ஜெ செய்யும் தவறுகளே திமுக வின் வாக்கு எண்ணிகையை கூட்டும். அரசின் கைது நடவடிக்கைகள் மக்களின் மனதில் எந்த மாற்றதும் ஏற்படுத்தவில்லை. இனி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது மறு பரிசீலனைக்கு உள்ளாகும் என நினைக்கிறன்.
6 MLA சீட்டு தரவா என இருந்த அளவில் மதிமுக உக்கு சிறிது முன்னேற்றம் . ஆனால் இன்னும் கொஞ்சம் நகராட்சிகள் கிடைத்தால் வைகோ விற்கு நல்லதாக இருந்திருக்கும . ஆனால் தூத்துக்குடி போன்ற மாநகரட்சிகளில் கிடைத்த ஓட்டு, அடுத்த தேர்தல் பேச்சு வார்த்தை களுக்கு பலன் அளிக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு மரண அடி கிடைத்துள்ளது. எண்ணிகையை வைத்து பார்க்கும் பொழுது பிஜேபி,PMK , தேமுதிக ,இரண்டு கம்யூனிஸ்ட் சேர்ந்து ஒரே அளவில் உள்ளன. மதிமுக அதற்கு சற்று குறைவாக உள்ளது. ஆனால் வாக்கு சதவீதம் வேறு வரிசை படுத்தும்.
தற்போதைய நிலைமை:
|